Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2020 18:00:53 Hours

படை வீரர்களை நினைவு படுத்தி தொலைக்காட்சி கலந்துரையாடல்

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை ஒழித்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தன்று, இலங்கை ரூபாவாஹினி கூட்டுதாபனத்தில் ஒழிபரப்பாகும் பிரபலமான நிகழ்வான 'நுகசெனெ' நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று (18) ஆம் திகதி கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் “தேசிய போர் வீரர்கள் தினம்” குறித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் முப்படை வீரர்கள்,பொலிஸ் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினரும் இந்த முக்கிய கலந்துரையாடலில் பங்குபற்றிருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சில்வா மேலும் தெரிவிக்கையில், மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படைவீரர்களுக்கும் அனைத்து இன மக்களும் சாந்தி மற்றும் சமாதானம், வேண்டி ஆசீர்வாத பூஜைகள், பிரார்த்தனைகளை நடத்தினர். எங்கள் வரலாற்றின் அந்த முக்கியமான கட்டத்தில் எங்களுக்கு ஆசிர்வதித்த அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன், எனது மிக உயர்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்தகைய ஆசீர்வாதங்களை ஒருபோதும் மறக்க முடியாதது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் முழு கானொளி இங்கே: Adidas shoes | Nike