Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th July 2020 22:51:20 Hours

படை விராங்கணைகளுக்கு ‘இளமையும் மகளிர் படையும்’ தொடர்பான செயலமர்வு

பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசணைகள் வழிகாட்டலில் உளவியல் செயற்பாட்டு பணிப்பகம் சந்துன்புர மகளிர் பயிற்சிப் பாடசாலையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் படை விராங்கணைகளுக்கு மன நலனை மேம்படுத்துவதற்கான பயிற்சி பட்டறையை நடாத்தியது.

இளமையும் மகளிர் படையும்’ குறித்து இளம் மகளீர் வீராங்கணைகளுக்கு கற்றலுக்காக வடிவமைக்கப்பட்ட மேலும் ஒரு செயலமர்வு சந்துன்புர மகளிர் பயிற்சி பாடசாலையில் நடைபெற்று வருகிறது. இதில் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மஞ்சுல கருனாரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் லெப்டினன்ட் கேணல் பிஜிஎஸ் சமந்தி அவர்களினால் புதன்கிழமை 8 ம் திகதி நடாத்தப்பட்டது.

இது நடந்து கொண்டிருக்கும் கல்வித் திட்டங்களின் ஒரு பகுதியாக தடுப்பு மருத்துவம் மற்றும் மன நல பணிப்பகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வமர்வில் 50 க்கும் மேற்பட்ட பெண் வீராங்கணைகள் பங்குபற்றிருந்தனர். bridge media | New Releases Nike