Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2021 21:00:29 Hours

படையினர் விவகார பணிப்பாளர் முன்னாள் வீரர்களுடன் சந்திப்பு

மொனராகலை, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் இராணுவ சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போர் வீரர் அங்கத்தவர்களை திங்கட்கிழமை (01) தியதலாவை கோல்ப் கிளப் வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடிய படையினர் விவகார பணிப்பாளர் பிரிகேடியர் எம்.மாயாதுன்ன, அவர்களுக்கான எதிர்கால நலன்புரித் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இராணுவ தளபதியவர்களின் அறிவுரைக்கமைய இராணுவ சேவையிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக வெளியேறியவர்களை உள்ளடக்கி அவர்களது சுகவாழ்வு மற்றும் நலன்புரிதல் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில் சங்கங்கள் உருவாக்கபட்டிருந்ததோடு, அவர்கள் சமூகத்தில் கௌரவம் மற்றும் மரியாதையுடன் வாழ வழி செய்யும் நோக்கத்திலேயே இராணுவ தளபதியவர்களால் இந்த யோசனை முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்காகும்.

அதேவேளை, வவுனியா மாவட்ட ரணவிரு சங்கத்தின் ஒருங்கிணைப்பின் மூலம், வவுனியா பெரியகுளத்தில் வசிக்கும் அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற ஆணையற்ற அதிகாரி 11 எம்.எம்.ஹேரத் பண்டாவிற்கு சக்கர நாற்காலியை வழங்குவதற்கு படைவீரர் விவகார பணிப்பாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்திருந்ததோடு, இந்த நன்கொடை நவம்பர் 05 ஆம் திகதி 56 வது படைப்பிரிவின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் டளிள்யூ.ஏ.எஸ்.பிரியந்தலால் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

படையினர் விவகார பணிப்பாளர் பிரிகேடியர் எம் மாயாதுன்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் கலந்துகொண்ட கொண்ட சிலர் தங்களது எண்ணங்களை பகிர்ந்துகொண்டனர்.