Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையினர் மற்றும் உலியன்குலம் கிராம வாசிகள் இணைந்து 2800 மணல் மூட்டைகள் பயன்படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் பணிகளில்

கிளிநொச்சி துனுக்காய் பிரதேச செயலக பிரிவின் உலியன்குலம் குளத்தின் கட்டு வெள்ளத்தினால் பதிக்கப்பட்டதை தொடர்ந்து கிராமவாசிகளினால் கொடுத்த தகவலை தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது மற்றும் 19 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியின் 150 படையினர்களுடன் 100 கிராமவாசிகளும் இணைந்து (27) ஆம் திகதியன்று 2800 மண் மூட்டைகள் பயன்படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி விவசாய நடவடிக்கைகளல் ஈடுபடும் கிராமவாசிகள் (26) ஆம் திகதி சனிக் கிழமை மாலை 65 ஆவது படைபிரிவிற்கு சென்று ஆபத்தான நிலைமைப் பற்றி படைத் தளபதிக்கு தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக குள அணைக்கட்ட மற்றும் பிரதேசத்தில் ஏற்பட்ட அனார்த்தத்துக்கு உதவி தரும் மாறு கேட்டுக் கொண்டார்கள்.

முல்லைத்தீவு நீர்பாசன பொறியியலாளர் மற்றும் கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ தினணக்கழத்தினரால் நிலவும் பேரழிவு நிலைமை பற்றி 65 ஆவது படைப் பிரிவினருக்கு தெரிவித்;துக் கொண்டதை தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்ப படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன அவசர தேவை பற்றி மேலும் விளக்கினார்.

இதற்கிடையில், 65 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் மற்றும் அனைத்து அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய படையினர்களால் உடனடியாக மணல் சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டதுடன் கிராமவாசிகளின் உதவியுடன் 50 டெக்டர் பெட்டிகளை பயன்படுத்தி மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டனர்.

இராணுவத்தினரில் ஒத்துழைப்புடன் எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரும் பல மணிநேர காலத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த தண்ணீர் சேதமடைந்த பகுதிகளைச் சுற்றிலும் 2800 க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பயன்படுத்தி நிரப்பினர்.

கட்டளை தளபதிகள் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினர் மற்றும் நீர்பாசன பொறியாளர் அதிகாரிகளினால் இந்த நடவடிக்கைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இராணுவத்தினரால் (27) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரை இந் சீரற்ற கால நிலை நடவடிக்ககைகள் மேற் கொள்ளப்பட்டது. கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய உலியன்குலத்திற்கருகில் 500 க்கு மேற்பட் குடும்பங்கள் வாழ்கின்றனர்.

Sports Shoes | nike fashion