Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2025 15:13:45 Hours

படையினர் பொதுமக்களின் பங்களிப்புடன் சுத்தம் செய்யும் பணிகளில்

தூய இலங்கை திட்டத்தில், மன்னார் மாவட்ட பொதுமக்கள் 2025 பெப்ரவரி 23 அன்று 24 கடலோரப் பகுதிகளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சீ.பீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் இந்த திட்டத்தை நடத்துவதற்கு தங்கள் ஆதரவை வழங்கினர்.

இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்கள் அதே நாளில் முல்லைத்தீவு கடற்கரையில் இதேபோன்ற தூய்மைபடுத்தும் பணியை முன்னெடுக்க 591 வது காலாட் பிரிகேட் படையினர் தங்களின் ஒத்துழைப்பை வழங்கினர்.

மேலும், 2025 பெப்ரவரி 24 அன்று, 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி பாலிநகர் குமாரசாமி ஆரம்ப பாடசாலையை சுத்தம் செய்யும் திட்டம் நடாத்தப்பட்டது.