Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th May 2021 10:07:28 Hours

படையினர் புயலால் பாதிக்கப்பட்ட வல்கம வீடுகளுக்கு உதவி

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 141 வது பிரிகேட்டின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின் படையினர் செவ்வாய்க்கிழமை (04) வல்கம பகுதியில் வீசிய கடுங் காற்றினால் வீடுகள் மீது வீழ்ந்திருந்த மரச் செடிகளை அகற்றினர்.

இப்பகுதியில் வீசிய கடும் காற்றினால் 6 வீடுகள் முழுமையாக சேதமடைந்துடன் 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யப்பா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க அவர்களின் வழிநடத்தலில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி குறித்த பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளில் வீழ்ந்திருந்த மரஞ் செடிகளை அகற்றும் திட்டம் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் கே.வை பிரியதர்ஷனவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.