Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th November 2021 14:55:49 Hours

படையினர் நெற் செய்கைக்கான சேதனை பசளை பரிசோதனை

முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி படையினர் சேதனை பசளை உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய நடவடிக்கைக்கு இணங்க, எல்ல - கந்தளாய் பிரதேசத்தில் பாரம்பரிய முறையில் நெல் விதைப்பு திட்டத்தை (22) திங்கட்கிழமை ஆரம்பித்தது.

இராணுவத் தலைமையத்தின் 'துரு மிதுரு – நவ ரட்டக்’ திட்டத்துடன் இணைந்த நெல் விதைப்பு விழாவிற்கு, இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் எச்.ஏ.பி.பி.கே ஹேவாவசம் அவர்களினால் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசணைகள் வழங்கப்பட்டன.

முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி கட்டளை அதிகாரி லெப்டினண் கேணல் சி.எஸ் தேமுனி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் அவருடன் எல்ல-கந்தளாய் முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் எல்ல கந்தளாய் நிலையத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜி.டபிள்யூ.இ.ஐ சேனாதீர அவர்களும் ஆரம்ப நெல் விதைப்பு விழாவில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் சமய அனுஷ்டானங்களுக்கு பிறகு, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விதைப்பு விழாவை ஆரம்பித்தனர்.