Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2021 19:42:32 Hours

படையினர் அனர்த்த முகாமைத்துவ பயிற்சியில்

வெள்ளம், பேரழிவுகள் மற்றும் தேடுதல் தொடர்பான எந்தவொரு அவசரகால சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் இராணுவத்தினர் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளை தொடங்கியது.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் ஆலோசனைக்கு அமைய மேற்கு பாதுகாப்பு படை தலைமையக மாநாட்டு மண்டபத்தில் புதன் கிழமை (17) 'இலங்கையில் அனர்த்த தயார்நிலை மற்றும் தணிப்பு' என்ற தலைப்பில் ஒரு நாள் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தணிப்பு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி அனோஜா செனவிரத்ன மற்றும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இராணுவ ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கெப்டன் N.H.S பெரேரா ஆகியோர் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பு, அனர்த்த இடர்களை புரிந்துகொள்வது, அனர்த்த முகாமை, பேரிடர் அபாயம் தொடர்பான அனைத்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய செயலமர்வை நடத்தினர். இந்நிகழ்வில், மறுவாழ்வு மறுசீரமைப்புக்கான தயார்நிலை, மீட்பு, கொள்கையைப் பின்பற்றுதல் மற்றும் இலங்கையில் அவசரகால நேரத்தில் எவ்வாறு செயல்படுவது என்பனவும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் பணியாளர்கள், அதிகாரிகள், பிரதி நிலையத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் விளக்கம் மற்றும் செயற்பாட்டு செயலமார்வில் பங்கேற்றனர்.