Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2024 17:09:54 Hours

படையினர்களுக்கு சமையற் கலை திறன்கள் மேம்பாடு

கல்கிசை ஹோட்டல் சமையல் அலுவல்கள் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் சமையல் ஆலோசகர் தேசபந்து கலாநிதி பபிலிஸ் சில்வா அவர்கள் திருகோணமலையில் உள்ள 22 வது காலாட் படைப்பிரிவில் 2024 ஜனவரி 09 மற்றும் 10 ஆகிய திகதிளில் சமையல் கலையை மையமாக வைத்து இரண்டு நாள் பட்டறையை நடாத்தினார்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சீனக்குடா இலங்கை விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த 3 சமையல்காரர்கள் உட்பட 104 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 22 வது காலாட் படைப்பிரிவு பகுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவ நிறுவனங்களுக்கும் சேவை செய்யும் சமையல்காரர்களின் சமையல் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுடன் இப் பட்டறை தத்துவார்த்த மற்றும் நடைமுறை அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.

பட்டறையின் நிறைவில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கியதுடன் அதே நேரத்தில் சமையல்காரர் பபிலிஸ் சில்வா தனது சேவைக்காக பாராட்டுச் சின்னத்தைப் பெற்றார்.