Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2019 13:53:30 Hours

படையினருக்கு எச்.ஐ.வி & எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

கொழும்பு இராணுவத் தலைமையகத்தின் இராணுவ தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சுகாதார சேவைகள் பணிப்பகத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் எச்.ஐ.வி & எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது புதன் கிழமை 4ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வானது ‘உலக எச்.ஐ.வி & எயிட்ஸ் தினத்துடன்’ 400 இற்கும் அதிகமான இராணுவத்தினரது பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

வெனிரியலொஜிஸ்ட் நிபுணத்துவ வைத்தியர் பிரியந்த பாலகல்ல, வைத்தியர் ஏ.ரொஹான், வைத்தியர் கே.வைரமுத்து மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் ஊளியர்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வை நடாத்தினர்.

மேலும் இந்த நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் ஆசியுடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Best jordan Sneakers | Footwear