Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2020 12:51:01 Hours

படையினரின் ஒத்துழைப்புடன் தனிமைப்படுத்தல் மையத்தில் இரண்டு சிறுவர்களின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு

கோவிட்-19 தொற்று நோய்கெதிரான சுகாதார வழிகாட்டுதலுக்கு மத்தியில், இரண்டு சிறுவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது, ஆனையிரவு தனிமைப்படுத்தல் மையத்தில் அங்கு சேவைபுரியும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

தொற்று நோய்க்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதனையடுத்து , வாழைத்தோட்டம், மருதானை பிரதேசங்களைச் சேர்ந்த 100 நபர்கள் ஆனையிரவு தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். கடந்த வருடம் பிறந்த நாளினை கொண்டாடிய சிறுவர்கள் எதிர்பாராத விதமாக அங்கு தனிமைப்படுத்தலில் உள்ளதனால் தங்களின் பிறந்த நாளான 2020 மே மாதம் 4 மற்றும் 6 திகதி கொண்டாடுவதில் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அவர்களின் பிறந்த நாள் தொடர்பாக இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தியவுடன், படையினர் அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்துடன் இரண்டு பேருக்கும் தனிமைப்படுத்தல் மையத்திலுள்ள வளங்களை பயன்படுத்தி சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து பிறந்த நாள் கேக்கினை வெட்டி பிறந்த நாளினை கொண்டாட ஏற்பாடுசெய்து கொடுத்தனர். இராணுவத்தினரின் இச்செயற்பாட்டிற்கு பெற்றோர்கள் தங்களது நன்றியினை தெரிவித்தனர். Sports brands | Air Jordan