Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2024 18:04:10 Hours

படையினரால் வன்னியில் வீழ்ந்த மரங்கள் அகற்றி படையினரால் போக்குவரத்து சீரமைப்பு

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 5 வது (தொ) கஜபா படையணி மற்றும் 4 வது தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 28 நவம்பர் 2024 அன்று இரண்டு இடங்களில் விழுந்த மரங்களால் ஏற்பட்ட போக்குவரத்து தடை நீட்கப்பட்டது.

211 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 5 வது (தொ) கஜபா படையணி படையினர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து நானுமில்லேவ சந்தியில் உள்ள விலேவெவ வீதியில் தடையாக இருந்த மரமொன்றை அகற்றினர்.

அதே சமயம், 212 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 4 வது தேசிய பாதுகாவலர் படையணி படையினர் போகொல்லேகம, தலாவ-எப்பாவல இஹலவெவ வீதி தடை நீக்கப்பட்டது.