Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 19:17:06 Hours

படையினரால் யாழ். முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்கல்

தேசிய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு அமைய, நாடு முழுவதும் இராணுவம் மற்றும் சகோதர படைப்பிரிவினால் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 4 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் மருத்துவ குழுக்கள் மற்றும் சிப்பாய்களால் திங்கட்கிழமை (5) யாழ்ப்பாண தீபகற்பத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு படையினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, யாழ்ப்பாணம், சங்காணை, சண்டிலிப்பாய், வேலனை, உடுவில், கோப்பாய், மருதங்கேணி, நல்லூர், தெல்லிப்பலை மற்றும் சாவகாச்சேரி ஆகிய பகுதிகள் உட்பட 19 பிரசேங்களில் அமைக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையங்களில், 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண தொற்றுநோயியல் பிரிவு மற்றும் சுகாதார அதிகாரிகளால் முன்பு திட்டமிடப்பட்டவாறு (ஜூலை 5-8), ஆகிய நான்கு தினங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 24,182 பேருக்கு இராணுவத்தினரால் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாடலின் கீழ் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் யாழ் மாவட்டத்தின் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான செயற்குழுவின் மாவட்ட இணைப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.