Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2019 20:07:15 Hours

படையினரால் யாழ் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் துன்னலை தெற்கு அரச தழிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 96 இற்கும் அதிகமான மாணவர்களின் தேவையினை கருத்திற்கொண்டு எழுது பொருட்கள், புத்தகங்கள், மற்றும் பாடசாலை பைகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், இவ்வன்பளிப்பானது யாழ். பாதுகாப்பு படைத் தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, கடந்த வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி பாடசாலையில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் பங்களிப்புடன் வழங்கப்பட்டது.

551 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி, பல சிரேஷ்ட அதிகாரிகள், உதவிப் பிரதேச செயலாளர், வடமராச்சி வலயக் கல்வி பணிப்பாளர் பொய்ன்ட் பெட்ரோ, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி நிறுவனத்தின் யாழ் மாவட்ட முகாமையாளர், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதிபர், ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Marki