Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2021 10:10:10 Hours

படையினரால் முப்படை வைத்தியசாலை பிரிவு புதுப்பிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2 வது பொறியியலாளர் சேவைப் படையணி மற்றும் 3 வது இலங்கை வைத்திய படையணியின் சிப்பாய்கள் இணைந்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள முப்படை வைத்தியசாலையின் ஒரு பகுதியினை திருத்தும் பணிகளை முன்னெடுத்தனர்.

இந்த திட்டமானது வடமத்திய முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சில்வா அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.