Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2024 18:10:59 Hours

படையினரால் நீர்த்தேக்கம் சுத்திகரிப்பு மற்றும் நிவாரண பணிகள்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நவகத்தகம ஒல்லுக்குளிய நீர்த்தேக்கம் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டதை தொடர்ந்து 143 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் 70 படையினர் நீர்த்தேக்கக் கரைகளில் பிளவு ஏற்படாதவாறு மணல் மூட்டைகளை அடுக்கி வெள்ளத்தை தடுத்தனர்.

மேலும், சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புவக்பிட்டிய ஸ்ரீ சங்கமித்தா மடாலயம் 21வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டது.