Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st March 2020 22:43:43 Hours

படையினரால் தீயணைக்கும் பணிகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 143 ஆவது படைப் பிரிவில் பணியாற்றும் 1 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியினரால், 29 ஆம் திகதி மதியம் குருனாகல பிரதேசத்தின் யந்தம்பலவ சுந்திரபொலவில் உள்ள குப்பை மேற்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவரசர அழைப்பை ஏற்று அவ்விடத்துக்கு இலங்கை இராணுவ பாதுகாப்பு படையணியின் ஒரு அதிகாரியும், 26 படையினர்களும் விரைந்து சென்று இரண்டு புல்டோசர்களின் உதவியுடன் தீ பரவுவதை தடுக்கும் பணிகளை மேற் கொண்டனர்.

அத்துடன், ஒரு வானூர்தியின் உதவியுடன், இலங்கை விமானப்படை படையினர்கள் மற்றும் தீயணைப்பு படையினர்கள் இணைந்து தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த தீயணைக்கும் நடவடிக்கையானது 143 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டி.எம்.பி.டி திஸாநாயக்க அவர்களின் மேற் பார்வையின் கீழ் இடம்பெற்றன.best shoes | Nike Air Max