13th December 2023 21:32:14 Hours
அவுஸ்திரேலியாவை வதிவிடமாக கொண்ட தம்பதியரின் அனுசரணையுடன் 22 வது காலாட் படைப்பிரிவின் 222 வது காலாட் பிரிகேட் படையினர் ஸ்ரீ சுமேதங்கர அறநெறி பாடசாலையில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் கொண்ட பிள்ளைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பெருமளவிலான பாடசாலை உபகரணங்கள், எழுதுபொருட்களை மற்றும் புத்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) சேருவாவில ரஜ மகா விகாரை வளாகத்தில் நன்கொடையாக வழங்கினர்.
222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்.கே.எஸ் திலகரத்ன அவர்களின் வேண்டுகோளின் பேரில் அவுஸ்திரேலியாவை வதிவிடமாக கொண்ட திரு.ரோபித கன்னொருவ மற்றும் அவரது குடும்பத்தினர் இத்திட்டத்திற்கு ரூபா 220,000/= பெறுமதியான பண உதவியை வழங்கினர். 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டு தரம் 1-4 இல் கற்கும் 101 தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு அந்த உதவிகளை வழங்கினார்.
மேலும், வழங்கல் நிகழ்வு நிறைவடைந்ததுடன், பாடசாலையில் உள்ள 250 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறநெறி பாடசாலை வளாகத்தில் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
நன்கொடையாளரின் குடும்பத்தினர், 222 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 9 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.