Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st March 2020 22:32:57 Hours

படையினரால் கோவில் வளாகத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால், இரணைமடு பிரதேசத்தில் அமைந்திருக்கும் கனகாம்பிகை அம்மன் கோவில் வளாகத்தில் 29 ஆம் திகதி சனிக்கிழமை சிரமதான பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

இச் சிரமதான பணிகளில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 4 அதிகாரிகள் மற்றும் 35 படையினர்கள் கலந்து கொண்டதோடு, படையினரின் இச் சமூக சேவைக்காக இந்து குருக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.buy shoes | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf