Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2021 07:00:46 Hours

படையினரால் கோவில் வளாகத்தில் சிரமதானம்

12 வது இலேசாயுத காலாட் படையினர் மற்றும் 14 வது இலங்கை சிங்கப் படையினர் இணைந்து எவலோன் தனியார் நிறுவன ஊழியர்களுடன் இணைந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

மேற்படி சிரமதான பணிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 59 படைப்பிரிவு தளபதியின் வழிக்காட்டலில் 591 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா அவர்களால் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பொதுமக்கள் சிலரும் கைகோர்த்து கொண்டதோடு சுகாதார ஒழுங்கு விதிகளை முறையாக பின்பற்றி சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.