Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th May 2021 09:01:12 Hours

படையினரால் கொடிக்காமம் நகரம் மற்றும் பொது இடங்களை தொற்று நீக்கம்

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதியும் யாழ்ப்பாண மாவட்ட கொவிட் 19 பரவலை கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிக்காட்டலில் 52 வது படைப்பிரிவின் படையினர் வியாழக்கிழமை (6) கொடிக்காமம் நகரம் மற்றும் பொது இடங்கலை் தொற்று நீக்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.

52 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பில் பஸ் தரிப்பிடம், ரயில் நிலையம், நலன்புரி நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள் மற்றும் பொதுவாக கூடும் இடங்களை என்பன தொற்று நீக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தொற்று நீக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.