Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2023 19:42:41 Hours

படையினரால் கரவெட்டி நாரத வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 551 வது காலாட் பிரிகேட் படையினர், மஹரகம ஸ்ரீ வஜிரஞான தர்ம யாதனய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையின் கீழ் கரவெட்டி ராஜகமனின் ஸ்ரீ நாரத வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை மே 15 விநியோகித்தனர்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு பாடசாலை எழுது கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதே நிகழ்வில் பாடசாலையிலுள்ள 19 ஆசிரியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆடைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜி, மற்றும் 551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்ஜே காரியகரவன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர்களின் வழிகாட்டலின், கீழ் 551 வது காலாட் பிரிகேட் படையினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இராணுவப் போர்க் கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் கேணல் பிடீடிடீ ஜயரத்ன பீஎஸ்சி மற்றும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளினால் இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வண. மீகஹவத்துரே சிறி விமல தேரர், அருட்தந்தை என் சுரேந்திரன், கரவெட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர், 4 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.