Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2020 09:00:39 Hours

படையினரால் கண்டி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள்

நாடு முழுதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கமைவாக மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படையினரால் (27) வியாழக்கிழமை கண்டி பிரதேசத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டமானது மழை பெய்ததன் காரணத்தினால் மக்களை டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.

இப் பணியானது மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா மற்றும்11 ஆவது பாதுகாப்பு படைப் பிரவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜாலிய சேனரத்ன ஆகியோர்களின் சமூக திட்டஒருங்கிணைப்பில் இடம் பெற்றன.

இந்த பணியில் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் பங்குபற்றினர். Running sports | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov