Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th May 2021 16:49:37 Hours

படையினரால் அமைக்கப்பட்ட புதிய கொவிட் 19 வாட்டு முல்லைத்தீவில் திறந்துவைப்பு

முல்லைத்து மாவட்ட வைத்தியச்சாலை வளாகத்தில் இராணுவ படையினரால் கட்டப்பட்ட கொவிட் -19 நோயாளிகளுக்கான புதிய விடுதி சனிக்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு கே. விமலநாதன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துக் கொண்டனர்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் திடீர் அதிகரிப்புக்கு முகம் கொடுக்கும் வகையில் கட்டில் வசதிகள் மற்றும் இடைநிலைப் பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த தனி விடுதியை தற்போதைய சிகிச்சை மையங்களின் ஒரு கட்டமாக நிர்மாணிக்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ அவர்களால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த புதிய விடுதியில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய 25 கட்டில்கள் உள்ளன. முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளையின் படி 68 வது படைப்பிரிவின் 16 வது பொறியியலாளர் சேவைப் படையினரின் தொழிநுட்ப ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

நாட்டில் தொற்றுநோய்க்கான தேசிய தேவையை கருத்தில் கொண்டு, சில நன்கொடையாளர்கள் இந்த திட்டத்திற்கு நிதி பங்களிப்பு வழங்கினர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவரகளின் வழிக்காட்டலில் 68 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார, 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி. ஆர். என். ஹெட்டியராச்சி மற்றும் 16 வது பொறியியலாளர் சேவைப் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் 16 வது பொறியியலாளர் சேவைப் படையினரால் 10 நாட்களுக்குள் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.