28th July 2021 17:00:38 Hours
நாரஹேன்பிட்ட, பொல்லெஹெங்கொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியில் புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட படையணி நூலகம் திங்கள்கிழமை (26) இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் வழங்கல் கட்டளைகள் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இராணுவ சம்பிரதாய முறைப்படி நூலகத்தின் நினைவு பலகையைத் திறந்துவைக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இது படையினர்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் நிமித்தம் அவர்களின் ஓய்வு நேரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவும், பலவிதமான பாடங்களில் தங்கள் அறிவை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந் நிகழ்வில் நிலைய தளபதி பிரிகேடியர் லட்சுமன் பமுனுசிங்க, சிறப்பு புலனாய்வு பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ரவீந்திர அபேசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் பங்கேற்றனர்.