Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டிகள்

இலங்கை இராணுவத்திலுள்ள படையணிகளுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கட் இறுதிச் சுற்றுப் போட்டிகள் (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பனாகொட கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த இறுதிச் சுற்றி போட்டிக்கு பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே மாஸ்டர் ஜெனரல் மற்றும் போர் கருவி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிமல் விதானகே அவர்கள் வருகை தந்தனர்.

படையணிகளுக்கான இந்த போட்டிகள் ஜூலை மாதம் 2 ஆம் திகதி பனாகொட, மத்தேகொட இராணுவ பொறியியலாளர் மைதானம் மற்றும் ஹம்பாந்தொட்ட மஹிந்த ராஜபக்‌ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டிகள் இலங்கை படைக்கலச் சிறப்பணி மற்றும் இராணுவ போர்கருவி படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இடையில் இராணுவ போர்கருவி படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இராணுவ போர்கருவி படையணி முழுமையாக 232 ரன்களை பெற்றிருந்தது. படைக்கலச் சிறப்பணி 175 ரன்களை பெற்றிருந்தது. போர்கருவி படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 1 செக்குகே பிரசன்ன அவர்கள் 74 ஓட்டங்களை பெற்று இந்த ஆட்டத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த போர் வீரன் கிரிசென் அபோன்சு அவர்கள் சிறந்த ஆட்ட வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு படைத் தளபதியினால் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. Running Sneakers Store | Yeezy Boost 350 Trainers