Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிகளுக்கு இடையிலான உள்ளக கயிறு இழுத்தல் போட்டி பனாகொடவில் நடைபெற்றது

இலங்கை இராணுவ தடகளத் தலைவரும் கிளிநொச்சியில் உள்ள தளபதி முதலாம் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் வழிகாட்டலுக்கமைய, இராணுவப் படையணிகளுக்கு இடையிலான 57வது கயிறு இழுத்தல் போட்டி - 2021, ஒக்டோபர் 26 - 27 ஆம் திகதிகளில் பனாகொடவில் உள்ள இலங்கை பொறியியலாளர் மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கு முன்னரான இரண்டு நாட்களிலும் அனைத்து படையணிகளிலிருந்தும் 300 போட்டியாளர்கள் கலந்துகொண்டதோடு இறுதி போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களால் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வெற்றியாளர்கள் விபரம் வருமாறு,

560 கிலோகிராம் பிரிவு (மகளிர்)

1 வது இடம் – 4 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி

2வது இடம் – 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி

3வது இடம் – 3 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி

560 கிலோகிராம் பிரிவு (ஆண்கள்)

1 வது இடம் – இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி

2 வது இடம் – இலங்கை பீரங்கி படையணி

3 வது இடம் – இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி

640 கிலோகிராம் பிரிவு (ஆண்கள்)

1 வது இடம் – இலங்கை பீரங்கி படையணி

2 வது இடம் – இலங்கை இலேசாயுத காலாட் படையணி

3 வது இடம் – இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி