Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2024 16:24:14 Hours

படையணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இலங்கை பீரங்கி மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி வெற்றி

பனாகொடை இராணுவ கிரிக்கெட் மைதானத்தில் 2024 மார்ச் 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்ற படையணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணி மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தமது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

10 படையணிகளை பிரதிநிதித்துவபடுத்தி இடம்பெற்ற போட்டியில் ‘ஏ’ பிரிவில், இலங்கை பீரங்கி படையணி சம்பியன்ஷிப்பைத் பெற்றதுடன் இலங்கை இராணுவ சேவைப் படையணி இரண்டாம் இடத்தை பெற்றது. , 14 அணிகள் பங்குபற்றிய ‘பி’ பிரிவில், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி இலங்கை சிங்க படையணியை தோற்கடித்து வெற்றியை சுவீகரித்துக்கொண்டது.

திறன் வெளிப்பாடுகள் பின்வருமாறு:

ஏ - பிரிவு'

சாம்பியன் - இலங்கை பீரங்கி படையணி

இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ சேவைப் படையணி

சிறந்த துடுப்பாட்டவீரர் – இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.ஜே.எஸ். ராஜபக்‌ஷ

சிறந்த பந்து வீச்சாளர் – இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் கே.டி.பிரேமதிலக்க

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் - இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய் எச்.டி.ஆர். சொய்சா

தொடர் ஆட்டநாயகன் - இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.ஜே.எஸ். ராஜபக்ஷ

பி - பிரிவு

சாம்பியன் - இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி

இரண்டாம் இடம் - இலங்கை சிங்க படையணி

சிறந்த துடுப்பாட்ட வீரர் - இலங்கை சிங்க படையணியின் கோப்ரல் பி.ஜீ.எல்.பீ. விஜேரத்ன

சிறந்த பந்து வீச்சாளர் – இலங்கை சமிக்ஞை படையணியின் சிப்பாய் டபிள்யூஎடி ஹசந்த

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் – இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் என்.ஜீ.பீ.கே. ஞானரத்ன

தொடர் ஆட்ட நாயகன் - இலங்கை சிங்க படையணியின் கோப்ரல் பீ.ஜி.எல்.பீ விஜேரத்ன