Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படைப்பிரிவுகளுக்கு இடையேயான காற்பந்துப் போட்டியில் 22 வது படைப்பிரிவு சாம்பியன்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நடாத்தப்பட்ட படைப்பிரிவுகளுக்கிடையேயான காற்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் 22 வது படைப்பிரிவு அணி, 1-0 என்ற கோல் கணக்கில் 23 வது படைப்பிரிவின் அணியை தோற்கடித்து 4வது முறையாக வெற்றி பெற்றது. இப்போட்டி திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்றது.

போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளும் கடுமையாக விளையாடி இரு அணிகளிலும் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய போதிலும், 22 வது படைப்பிரிவின் வீரர்களும் அசராமல், எதிரணியினரின் அனைத்து கோல் வாய்ப்புகளையும் தகர்த்து எதிரணியினரை தோற்கடித்தனர். கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் 22, 23 மற்றும் 24 வது காலாட் படைபிரிவுகள் மற்றும் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றை பிரதிநிதித்தி காற்பந்து அணிகளின் பங்கேற்புடன் இந்தப் போட்டி நடாத்தப்பட்டது. அணிகளின் தொடர் ஆட்டங்களில் விளையாடிய பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வீரர்களுக்கு படைப்பிரிவு அணிக்காக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

221 வது காலாட் பிரிகேட், 2 வது (தொ) கஜபா படையணி, 222 வது காலாட் பிரிகேட், 24 விஜயபாகு காலாட் படைபடைப்பிரிவு மற்றும் 223 வது காலாட் பிரிகேட், 6 வது இலங்கை கவச வாகன படையணி ஆகியவற்றின் வீரர்களை வெற்றி பெற்ற 22 வது படைப்பிரிவு உள்ளடக்கியிருந்தது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார். 22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம மற்றும் இப்போட்டியை ஒருங்கிணைத்த 221 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ ரத்நாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த, 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷேவந்த குலதுங்க, 2 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, அனைத்து பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இராணுவ அங்கம்பொர விளையாட்டுகளின் காட்சி, டேக்வாண்டோ நிகழ்வு மற்றும் கஜபா படையணியின் மேற்கத்திய இசைக்குழுவின் கண்காட்சி ஆகியவை காற்பந்து ரசிகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை மகிழ்வித்தன. பரிசளிப்பு விழாவில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி காற்பந்து கிண்ணம் - 2022 ஐ வெற்றி பெற்ற 22வது படைப்பிரிவின் அணிக்கு வழங்கினார்.