14th August 2020 12:16:06 Hours
இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியும், 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரதாப திலகரத்ன அவர்கள் 7 ஆவது தொண்டர் படைக்கலச் சிறப்பணி தலைமையகத்திற்கு இம் மாதம் (14) ஆம் திகதி உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்களுக்கு தலைமையக நுழைவாயிலில் வைத்து இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு குழுப்புகைப்படத்திலும் இணைந்து கொண்டார். அதன் பின்னர் அதிகாரி விடுதியில் மதிய உணவை எடுத்துக் கொண்டார். அத்துடன் தலைமையக பணிமனையில் அதிகாரிகளது பங்களிப்புடன் கோவிட் – 19 தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடினார்.
பின்பு படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தினார். இந்த உரையின் போது இராணுவத்தினர் தங்களது பகுதிகளில் கடமைகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் மிகவும் ஒழுக்கத்துடன் தமது பணிகளை மேற்கொண்டு இராணுவத்தின் கீர்த்தி நாமத்தை சிறப்படையச் செய்ய வேண்டும் என்றும் இராணுவத்தில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் வலியுறுத்தினார். Running sports | Nike sneakers