20th August 2021 09:17:35 Hours
பங்களாதேஷ் மீர்பூர் பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் முகம்மது சுபையர் சாலிஹின், தற்போது சம்புகஸ்கந்த இலங்கை பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் நடைபெற்று வரும் கூட்டு பயிற்சிகள் தொடர்பிலான செயலமர்வினை நடத்தி வரும் நிலையில் திங்கட்கிழமை (16) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இராணுவ தலைமையகத்தில் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடிய அவர், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு இடையே காணப்படும் இருதரப்பு உறவுகளைக் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த சில வருடங்களாக இலங்கை படையினர் மற்றும் முப்படை உறுப்பினர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்கியிருந்தமைமையி்ட்டு, பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதியிடம் பங்களாதேஷ் ஆயுத படைகளுக்கு நன்றிகளை கூறிக்கொண்டார். அதேபோல் தற்போதைய தொற்றுநோய் பரவல் அவதானம் காணப்படும் அச்சுறுத்தலான சூழலிலும் கூட தொழில்முறை பயிற்சி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புகளை வழங்குதல் , தைரியம் மற்றும் முன்ணுதாரனமாக செயற்படும் தன்மை என்பன இருநாட்டு படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் எத்தகையது என்பதை எடுத்துகாட்டுகிறது என்றார். அதேபோல் சகோதரத்துவத்துடனான மேற்படி உதவிகள் இளம் அதிகாரிகளின் தொழில் தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமையுமெனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இதன்போது பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் முகம்மது சுபையர் சாலிஹின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரிகளின் நட்புறவு அடிப்படையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டிய அவசியங்களை எடுத்துரைத்தார். அதேபோல் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது போன்ற மிகவும் வேலைப்பளுவான அட்டவணைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட்டமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதோடு பாராட்டத்தக்கதெனவும் தெரிவித்தார். அதனையடுத்து கலந்துரையாடலின் நிறைவம்சமாக இருவரும் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். வருகை தந்த மேஜர் ஜெனரல் சாலிஹின் தளபதியின் அலுவலகத்திலுள்ள விருந்தினர் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். பங்களாதேஷ் இராணுவ அதிகாரி தொடர்பாக சுருக்கமான விவரம் கீழ்வருமாறு,
மேஜர் ஜெனரல் முகமது சுபைர் சாலிஹின்,எஸ்யூபீ,என்டீயூ,பீஎஸ்சீ 1970 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதி பிறந்தார். 19 வது பங்களாதேஷ் இராணுவ கல்வியற் கல்லூரி நீண்டகால பாடநெறியில் இணைந்துக் கொண்ட அவர் பங்களாதேஷ் இராணுவத்தின் கள பொறியியல் படையணியின் அதிகாரியாக அதிகாரவாணை பெற்றுக்கொண்டார். அவர் தனது பயிற்சி காலத்தில் கோப்ரல் மற்றும் சிரேஸ்ட கீழ் நிலை கட்டளை அதிகாரி உள்ளிட்ட நியமனங்களை வகித்தார். அத்தோடு பாடநெறியின் சிறந்த உடற்தகுதி வீரராகவும் தெரிவு செய்யப்பட்டார். மேஜர் ஜெனரல் சுபைர் சாலிஹின் பங்களாதேஷின் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பட்டதாரியான அவர் சிவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராவார். அத்தோடு மேஜர் ஜெனரல் சுபைர் சாலிஹின் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுநிலை மற்றும் பங்களாதேஷ் தேசிய பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்பான முதுமானி பட்டத்தை பெற்றவர் ஆவார். மேலும் அவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் தொடர்பான முதுகலைப் பட்டம் பெற்றார்.
மேஜர் ஜெனரல் சுபைர் சாலிஹின் இராணுவத் தொழிலின் பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட அறிவைக் கொண்ட ஒரு அதிகாரியாவார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டளை அதிகாரிகளுக்கான இராணுவப் பயிற்சிகள் பலவற்றையும் நிறைவு செய்துள்ளார். அத்தோடு அவர் அதிகாரிகளுக்கான ஆயுதப் பாடநெறி, அதிகாரிகளுக்கான அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு, இளமானி அதிகாரிகளுக்கான கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி, அதிகாரிகளுக்கான சமிக்ஞை பாடப்பிரிவு பாடநெறி, ஆயுத நுட்பங்கள் தொடர்பிலான நுண்ணறிவுப் பட்டப்படிப்பு, பிளட்டூன் கொமாண்டர்ஸ் பாடநெறி, கட்டளை அலகுகள் , பாடப்பிரிவுகள் மற்றும் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்கான கற்கைகளையும் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய ராஜ்ஜிய இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நெருக்கடிகளின் போதான நடவடிக்கை திட்டமிடல், ஐக்கிய ராஜ்ஜியத்தின் இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பயிற்சி, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுத மோதல்கள் மற்றும் பங்களாதேஷ் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவம் மற்றும் ஊடகங்கள் பற்றிய செயலமர்வுகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜுபேர் சாலேஹின் பல்வேறு பிரிவுகள், தலைமை அலுவலகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பல்வேறு கட்டளை, பணியாளர்கள் மற்றும் கட்டளை நியமனங்களில் பணியாற்றியுள்ளார். அவர் பங்களாதேஷ் இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியாக இருந்தார். அவர் ஒரு பொறியியலாளர், பிரிகேட்டில் பிரிகேட் மேஜராக இருந்தார்., பங்களாதேஷின் பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் அவர் காலாட்படை , தந்திரோபாயப் பயிற்சி கல்லூரியின் ஆசிரியராகவும் செயற்பட்டார். அத்தோடு உளவு அதிகாரி, பிளாட்டூன் கொமாண்டர், பிரதி திட்டமிடல் அதிகாரி, கம்பெனி தளபதி மற்றும் பொறியாளர் பிரிவுகளில் இரண்டாவது கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். 1 வது வளைகுடாப் போருக்குப் பின்னர் குவாத்தில் உள்ள பங்களாதேஷ் பொறியியலார் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தார். அவர் பங்களாதேஷில் இரண்டு முறை பொறியியலாளர் பிரிவுகளுக்கும், ஒரு முறை தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையிலும் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்டுள்ளதோடு ஒரு பிரிகேடியர் மற்றும் ஜெனரல் நியமனங்களின் கீழ் அவர் தேசிய உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள ஒரு பொறியியலாளர் கட்டுமானப் படைக்கு கட்டளையிட்டார். சிட்டகாங்ஸ் மலைப்பகுதிகளில் கிளர்ச்சிகளுக்கு எதிரான காலாட் படை செயற்பாடுகளிலும் அமர்த்தப்பட்டார். அவர் டாக்கா நகர கழகத்தின் தலைமை பொறியியலாளராகவும் பணியாற்றினார். மேஜர் ஜெனரல் சுபைர் சாலிஹின் 17 வது காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் சில்ஹெட் பகுதிக்கான தளபதியாகவும் பணியாற்றினார்.
மேஜர் ஜெனரல் சுபைர் சாலிஹின் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். அவர் மகிழ்ச்சியான திருமணம் வாழ்வில் இரண்டு மகள்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர். தற்போது, அவர் டாக்காவின் மீர்பூர் படைத்தளம், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியாக பணியாற்றுகின்றார்.