Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th May 2021 19:37:26 Hours

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு இணைப்பதிகாரி இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கையின் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்திகாரியான கொமடோர் மொஹமட் ஷபியுல் பாரி புதன்கிழமை (5) இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இரு தரப்பு இராணுவ அமைப்புகளுக்கு இடையிலான நிலவும் நல்லுறவுகளின் மேலதிக முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் பங்களாதேஷ் இராணுவத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டதைத் தவிர இலங்கை முப்படை வீரர்களுக்கான பயிற்சிகள் தொடர்பாகவும் பிற முக்கிய விஷயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஜெனரல் ஷவேந்திர சில்வா கடந்த இரண்டு வருட புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பிற்கு நன்றியுடன் ஒப்புக் கொண்டதுடன் பங்களாதேஷின் இராணுவத்திற்கு பயிற்சி துறைக்கு எதிர்காலத்தில் இதுபோன்ற உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அவர் புறப்படுவதற்கு முன்பதாக இலங்கையின் கொவிட் -19 இன் தற்போதைய நிலை மற்றும் பிற தொற்றுநோய்களின் தன்மை குறித்து தெளிவுப்படுத்தப்பட்டார்.