Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2021 18:09:17 Hours

நொக்போ தலைவர் அவசர பயண கட்டுப்பாடுகள் மற்றும் அதன் ஆயத்தம் தொடர்பாக விளக்கம்

"இன்று, இரவு 11.00 மணி முதல் நாளை காலை 0400 மணி வரை நடைமுறைக்கு வருவகையில் அந்தந்த மாவட்டத்தினுள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும் பயணத் தடை விதிக்கிறோம், மற்றும் நீண்ட வார இறுதி நாட்களைக் கருத்தில் கொண்டு வியாழக்கிழமை (13) இரவு 11.00 மணி முதல் திங்கள் (17) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பயணத் தடை விதிக்கிறோம். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பொது மக்கள், அதாவது சுகாதாரம், இராணுவம், நீர், மின்சாரம், மற்றும் வைத்தியசாலைகளை அடைய விரும்புவோர், அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகள் போன்றவை அனுமதிக்கப்படும், மற்ற அனைத்து தேவையற்ற நடமாற்றங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்று கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவர்கள் இன்று (12) கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் விசேட கலந்துரையாடல் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இந்த சந்திப்பானது கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றுதுடன், இதில் வைத்திய நிபுணர்கள், சுகாதார நிர்வாகிகள், அரச அதிகாரிகள் மற்றும் சேவைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கொவிட் தொற்று நோய் எண்ணிக்கை மற்றும் கொவிட் இறப்புகள் அதிகரித்து வருவதால் மேற்கு மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் செயல்முறை திட்டமிட்டபடி தொடரும் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

"இந்த அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அதிமேதகு ஜனாதிபதி அனைத்து நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள், இலங்கை மருத்துவ சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் மருத்துவ பிரதிநிதிகளை சந்தித்து, தற்போதைய நிலை தொடர்பாக விரிவாக கலந்துரையாடி , கொவிட் தொற்றின் பரவல் மற்றும் அதிகரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பரிந்துரைகளை நாடினார்.

மொத்த ஊரடங்கு தடைகளுக்கு செல்லாமல் மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான ஆலோசனைகளை அவர்கள் முன்வைத்தனர் . ஆயினும்கூட, ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிப்பதைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அவைதான் இன்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் "என்று அவர் அறிவித்தார்.

"இதுவரை நாங்கள் 5 பொலிஸ் பிரிவுகளையும் 185 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் தனிமைப்படுத்தியுள்ளோம், எதிர்காலத்திலும் இந்த தொற்றுநோய் பரவாமல் தடுக்க இந்த மூலோபாயத்தை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம். கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட்டு நாடு முழுவதும் உள்ள இடை நிலை பராமரிப்புமையங்களில் காணப்படும் படுக்கைகள் 13,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளன .வீடுகளிலிருந்து நேரடியாக அருகிலுள்ள அவசர இடை நிலை பராமரிப்பு நிலையங்கள் அல்லது மருத்துவமனைக்கு விரைவாக அழைத்து செல்லும் நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதோடு எளிதான தொடர்புக்கான தொலைபேசி தொடர்பு வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன, இந்த சேவை படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய பணியாகும். இந்த சவாலான அவசரநிலைக்கு மருத்துவ அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களுடன் ஆம்புலன்ஸ்கள் வண்டிகளும் கிடைக்கின்றன. "

நோய் தொற்றுக்குள்ளான எந்தவொரு இலங்கையரும் தரையில் படுத்துக் கொள்ள அவர் அல்லது அவரது படைகள் விடவில்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த மனிதாபிமான நோக்கத்திற்காக எங்கள் படைகள் இதுவரை எங்கள் முகாம்களுகளில் படுக்கை வசதி செய்யவில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளவும் " நிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டால் நாட்டின் மற்றும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக எந்தவொரு சந்தர்பத்திலும் எந்தவொரு தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம், "என்று அவர் வலியுறுத்தினார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய பங்குதாரர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர் மற்றும் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்தனர்.