Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2019 12:58:43 Hours

நேபாளம் செல்லவுள்ள இலங்கை கூடைப் பந்தாட்ட வீரர்களை இராணுவத் தளபதி சந்திப்பு

நேபாளம் கத்மண்டூரில் இடம் பெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கூடைப் பந்தாட்டத்தை முன்னிலைப்படுத்தி பங்கேற்கவுள்ள இராணுவ விளையாட்டு வீரர்களை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வியாழக் கிழமை (28) சந்தித்தார்.

இதன் போது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் 5இராணுவ விளையாட்டு வீரர்களிடம் நலன்புரி விடயங்கள் மற்றும் எதிர்கால இலட்சியங்கள் தொடர்பாக் அவர்களிடம் கலந்துரையாடினார். இச் சந்திப்பில் இலங்கை சிங்கப் படையணியின் ரைபல் படைவீரர்; கே எஸ் எஸ் பெரேரா இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சாதாரண படைவீரர் ஜி கஜநாயக்க இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியின் சாதாரண படைவீராங்கணைகளான கே கே எம் டி எஸ் பெணான்டோ கே டீ டீ குணவர்தன போன்றோர் கலந்து கொண்டனர்.

இவ் ஐவருக்கும் இராணுவத் தளபதியவர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் இராணுவ கூடைப் பந்தாட்ட சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா இச் சங்கத்தின் செயலாளர் போன்றோர் கலந்து கொண்டனர். trace affiliate link | Zapatillas de running Nike - Mujer