01st September 2020 13:28:23 Hours
இன்று (01) காலை அறிக்கையின் படி மேலும் 37 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 37 நபர்களில், இந்தியாவில் இருந்து வருகை தந்த ஹிக்கடுவ லங்கா சூப்பர் கொரல் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் 03 பேர்,, ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த முல்லைத்தீவு விமானப்படை தனிமைபடுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இருவர், தோஹா கட்டாரில் இருந்து வருகை தந்த ஹோட்டல் ஜெட்விங் தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவர், கட்டாரில் இருந்து வருகை தந்த பெரியகாடு தனிமைபடுத்தல் மையத்தில் 04 மற்றும் கத்தார் நாட்டைச் சேர்ந்த விதத்தபலை தனிமைபடுத்தல் மையத்தில் இருபத்தி ஏழு (27) நபர்கள் உள்ளனர். இன்று (01) காலை 6.00 மணி அறிக்கையின் படி கொவிட் -19 எதிர்பார பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
மேலும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 639 ஆகும். இவர்களில் 518 பேர் புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள், 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் ஒரு நபர் உட்பட நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
தோஹாவில் இருந்து QR 668 விமானத்தின் மூலம் 60 பயணிகளும், குவைட்டில் இருந்து UL 230 விமானத்தின் மூலம் 216 பயணிகளும், தோஹா கத்தாரில் இருந்து UL 218 விமானத்தின் மூலம் ஒருவரும், மற்றும் துபாயிலிருந்து UL 226 விமானத்தின் மூலம் 265 பயணிகளும், சென்னையில் இருந்து 6E 9034 விமானத்தின் மூலம் 7 நபர்களும் மற்றும் ஹைதராபத்தில் இருந்து UL 178 விமானத்தின் மூலம் 178 பயணிகளும் கொழும்பு வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாளைக்குள் (01), பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட 187 நபர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல உள்ளனர். அவர்களில், கல்பிட்டி ருவல தனிமைபடுத்தல் மையம் 06 நபர்கள், ஹோட்டல் பார்ம் கார்டன் தனிமைபடுத்தல் மையத்தில் 98 பேர், மவுண்ட் லிவினியா ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் 04 பேர் மற்றும் பொரஸ்ட் ரொக் கார்டன் தனிமைபடுத்தல் மையத்தை சேர்ந்த 79 நபர்கள் ஆகும்.
அதேபோல், இன்று (01) காலை 35,142 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 71 தனிமைபடுத்தல் மையங்களில் 7,576 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (31) திகதிக்குள், 2020 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகள் 226,111. ஆகும்.
இன்று (01) ஆம் திகதி அதிகாலை கொரோனா தொற்றுக்குள்ளான 08 பேர் பூரண சுகடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேரியுள்ளனர். இவர்களில் 3 வெளிநாட்டைச் சேர்ந்த இலங்கையர் மற்றைய 05 புணர்வாழ்வு மையத்தில் தொடர்புபட்டவர்களாவர். அதன்படி, கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 624 நபர்கள் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதுடன் 15 நபர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரையிலும் கைதிகள், நண்பர்கள் மற்றும் இலங்கையின் வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை தவிர, கொவிட்-19 வைரஸ் தொற்று வேறு இடங்களில் பதிவாகவில்லை. இந்த தொற்றுநோயை நம் நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதுடன் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது அனைத்து இலங்கையர்களின் பொறுப்பாகும். (நிறைவு) Sportswear Design | Nike