Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2019 15:50:49 Hours

நீர்க்காக X- 2019 கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

முப்படையினர்களுக்காகவருடாந்தம் நடாத்தப்படும் நீர்க்காக X- 2019 கூட்டுப்பயிற்சியியானது இம்முறையும் 10ஆவது தடவையாக 2400 இராணுவம் ,400 கடற்படை, 200 விமானப் படைமற்றும் 10 நாடுகளில் இருந்து வருகைதந்த 80 வெளிநாட்டு இராணுவத்தினரின் பங்களிப்புடன் ஆரம்பமாகவுள்ளது.

மேலும் இக்கூட்டுப்பயிற்சிக்கான தொடக்கநிகழ்வானது இன்றுகாலை (3)ஆம் திகதி மின்னேரிய நீர்க்காக கூட்டுப்பயிற்சி தலைமையகத்தில் வைத்து இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களின் பங்களிப்புடன் புதன் கிழமை(4) ஆம் திகதி உத்தியோகபுர்வமாக பயிற்சியானது ஆரம்பிக்கப்பட முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கூட்டுப்பயிற்சிபணிப்பாளர் பிரதி கூட்டுப்பயிற்சிபணிப்பாளர் மற்றும் இப்பிற்சியில் கலந்துகொள்ளும் சில பிரதிநிதிகள் ஆகியோர் இப்பயிற்சியின் ஆரம்ப நிகழ்விற்கு முன்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மின்னேரிய தேவாலயத்துக்கு இன்று காiலை(3) சென்று வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டனர். மேலும் கூட்டுப்பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜேனரல் லக்சிறி வடுகே அவர்கள் ஆரம்ப உரையினை நிகழ்தியதோடு, பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பதவிநிலை அதிகாரியினால் சுருக்கவுரை வழங்கிய பின்னர் அவர்களை வரவேற்றார்.

விஷேட போர் தந்திர முறைகளைப் பயன்படுத்தி கொமாண்டோ படையினர் விஷேட படையினர் இயந்திரவியல் காலாட் படையினர் உட்பட 2400 காலாட் படைவீரர்கள், 400 கடற்படையினர், மற்றும் 200 விமானப் படையினருடன் வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் மற்றும் மலேசியா ,மாலைதீவு,நேபாலம், ரஷியா,பங்காலதேசம்,சீனா,இந்தியா,பாகிஸ்தான்,இந்தோநேசியா,நைஜீரியா,மற்றும் சாம்பியா போன்ற நாடுகளில் உள்ள கண்காணிப்பாளர்கள் உட்பட பலர் கூட்டுப்பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜேனரல் லக்சிறி வடுகே அவர்களின் வழிகாட்டுதலுக்கமைவாக இக் கூட்டுப்பயிற்சிநிகழ்வில் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் செப்டம்பர் 04- 24 திகதிகளில் நடைபெறும் பல விஷேட போர் கூட்டுப் பயிற்சியில் கலந்துகொள்ளும் நபர்கள் ஏனைய குறிப்பிடப்பட்டுள்ள போலிபோர் பயிற்சியிலும் கலந்துகொள்ளஎ திர்பார்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்புபடை தளபதி மேஜர் ஜேனரல் லக்சிறி வடுகே அவர்கள் இக் கூட்டுப்பயிற்சி பணிப்பாளராக, பிரதி கூட்டுப்பயிற்சி பணிப்பாளர் பிரகேடியர் சுஜீவ செனரத் யாபா, கொமாண்டோ படையணி கட்டளை தளபதி பிரிகேடியர் கே.ஏ. சமரசிறி ,மற்றும் விஷேட படையணியின் கட்டளை தளபதி கேணல் ஜே.பி.சி.பீரிஸ் அவர்களுடன் சேர்ந்துசேவையாற்றுகின்றார்.

மேலும் இப்பயிற்சியானது எதிர்வருகின்ற செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி குச்சவெளியில் ‘சிக்கல் மணவுறுதி ‘எனும் தொணிப்பொருளில் முடிவடைந்து 24 ஆம் திகதி இறுதி நிகழ்வானது இடம்பெறும். latest Running | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!