Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2023 00:19:26 Hours

நிலை உயர்வு பெற்ற வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தளபதிக்கு பாராட்டு

வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் படையினர் புதிதாக நிலை உயர்வு பெற்ற வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி எஎடிஓ அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து அதிகாரத்தின் அடையாள வாள்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் நவம்பர் 3 அன்று மைலிட்டி வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி வளாகத்தில் இராணுவ மரபுகளுக்கமைய கௌரவித்து வரவேற்கப்பட்டார்.

5 வது இலங்கை இராணுவ போர் கருவி படையினரால் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், கௌரவிப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

தளபதி மேஜர் ஜெனரல் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி எஎடிஓ அவர்கள் வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் படையினருக்கு உரையாற்றியதுடன், குழு படங்களும் எடுத்துக் கொண்டார்.

வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.