Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2021 20:00:41 Hours

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், ஒழுக்காற்று பணிப்பாளர் மற்றும் நலன்புரி பணிப்பாளர் அனைத்து நிலையினரை அறிவூட்டல்

நலன்புரி நிவாரண நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், அனைத்து நிலையினரின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த அறிவூட்டல் திட்டம், நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, ஒழுக்காற்று பணிப்பாளர் பிரிகேடியர் அனில் இளங்ககோன், நலன்புரி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கனிஷ்க ஹெயந்துடுவ, ஆகியோரால் ஜூலை மாதம் 3 - 5 காலப்பகுதியில் முல்லைத்தீவு , கிளிநொச்சி ,வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் - மற்றும் 21 வது படைப்பிரிவு என்பவற்றில் முன்னெடக்கப்பட்டது.

நலன்புரி மற்றும் ஒழுக்காற்று விடயங்களில் அறிவைப் புதுப்பிப்பதற்காக பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இவ்வறிவூட்டல் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வன்னி தளபதிகள் மற்றும் 21 வது படைப்பிரிவு தளபதி மற்றும் அந்தந்த அமைப்புகளின் சிரேஸ்ட அதிகாரிகள் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.