09th August 2021 14:42:41 Hours
கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தை மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன , லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ , கஜபா படையணியின் கேணல் வை.எம்.பலிபான மற்றும் பிற போர்வீரர்களின் 29 வது நினைவு தின அனுட்டிப்பு நிகழ்வுகள் இறுதியாக அனுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்று முடிந்தன.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கஜபா படையணி மற்றும் விஷேட படையின் படைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன மற்றும் கேணல் வை.எம்.பலிபான ஆகியோரின் 29 வது நினைவு தினத்தையொட்டி படையினரால் யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து நடத்தப்பட்ட வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள் ருவன்வெலிசாயவில் நடைபெற்ற 'அஷ்டபான' பூஜையுடன் நிறைவு பெற்றன.
கஜபா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம மற்றும் பதவி நிலை அதிகாரிகள் படைப்பிரிவு சிப்பாய்களும் கலந்துகொண்டனர். இதன்போது மலர் அஞ்சலி, மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்குதல், உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.