Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd November 2023 20:40:03 Hours

நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் இராணுவ நலன்புரி நிதிய பணிப்பாளரை சந்திப்பு

நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) பனாகொட இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்திற்கு விஜயம் செய்தார்.

வருகை தந்த அவரை நுழைவாயிலில் இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீ.ஆர் சமரவீர அவர்கள் வரவேற்றதுடன், இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தின் வரலாறு, வகிபங்கு மற்றும் பணிகள் குறித்து நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.

இறுதியில், பிரிகேடியர் பீ.ஆர் சமரவீர அவர்கள், மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் விருந்தினர் பதிவேட்டில் புத்தகத்தில் பாராட்டு குறிப்புகளை எழுதினார்.

இந்நிகழ்வின் போது இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.