02nd October 2023 23:28:07 Hours
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 29 - 30 ஆம் திகதிகளில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 523 வது காலாட் பிரிகேட் படையினரின் ஏற்பாட்டில் யாழ். நாவட்குழி லக்தரு பாலர் பாடசாலையின் சிறுவர்கள் கொழும்புக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர்.
யாழில் இருந்து புகையிரதத்தில் அவர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்றதுடன், இராணுவத்தினரின் பேருந்து வசதியினால் அவர்களின் நகரப் பயணம் இலகுவானது. அவர்கள் ‘வாட்டர் வேர்ல்ட் களனி’ மற்றும் ‘கொழும்பு தாமரைக் கோபுரம்’ ஆகியவற்றை பார்வையிட்டனர்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் ஆசீர்வாத்தினால் அந்தச் சிறுவர்கள் முதல் முறையாக தலைநகரை பார்வையிட முடிந்தது. 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் கருத்திற்கமைய இச்சுற்றுப் பயண ஏற்பாடுகள் நடைபெற்றன.
இப்பயணத்தின் போது 11 வது கள இலங்கை பொறியியல் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன. மேலும், அவர்களுக்கு 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதியினால் இனிப்புகளும் வழங்கப்பட்டது.
யாழ். ‘லக்தரு’ பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இராணுவத்தினரின் ஏற்பாட்டை பாராட்டினர். 523 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்பிஎல் பெரேரா ஆரஎஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.