Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2021 14:35:13 Hours

நாவட்குழி சிறார்களுக்கு படையினரால் பாலர் பாடசாலை நிர்மாணம்

52 வது படைப்பிரிவு மற்றும் 523 வது பிரிகேட் படையினரால் நாவட்குழி கிராமத்தின் சிறார்களுக்காக நிர்மாணிகப்பட்ட பாலர் பாடசாலை கட்டிடம், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களினால் வெள்ளிக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது.

நவாட்குழி கிராமத்தின் சிறுவர்களுக்கு அவசியமானதாக காணப்பட்ட பாலர் பாடசாலை கட்டிடம், பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க நனவாக்கிக் கொடுக்கப்பட்டது. யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் கிராம மக்களிடையே நடைபெற்ற சந்திப்பின் பலனாக மேற்படி அவல நிலையை போக்கும் நோக்கில் 52 வது படைப்பிரிவினரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாண பணிகள் மிகக் குறுகிய காலத்தில் நிறைவு செய்யப்பட்டன.

கட்டடத்திற்கு அவசியமான தளபாடங்கள் மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் திறப்பு விழா நிகழ்வில் சிறார்களுக்கு பரிசளிக்கப்பட்டன. நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டும் விதமாக சிறார்களுக்கான கற்பித்தல் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

52 வது படைப்பிரிவு தளபதி, 521, 522 மற்றும் 533 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக சிப்பாய்கள் ஆகியோர் இராணுவ தலைமையகத்தினால் விடுக்கப்பட்ட சுகாதார ஒழுங்கு விதிகளை முறையாக கடைப்பிடித்து நிகழ்வில் கலந்துகொண்டனர்.