Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2022 15:18:50 Hours

நாட்டின் நலனுக்காக கதிர்காமத்தில் ஜனாதிபதி மற்றும் பிரபுக்கள் பிரார்தனை

2022 புத்தாண்டு பிறப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருடன் நாட்டின் முதல் பெண்மணி, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார், அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, பாதுகாப்புச் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), , பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியார், கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் அவர்களின் பாரியார்கள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பல நிர்வாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை (டிசம்பர் 31) புத்தாண்டில் நாட்டின் நலனுக்காக ஆசிவாதங்களை பெற்றுக்கொள்வதற்கு வரலாற்று சிறப்புமிக்க புனித கதிர்காமத்திற்கு விஜயம் செய்தனர்.

முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோர் கிரிவெஹரவில் வண. கோபவக தம்மிந்த நாயக்க தேரரை நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் யானையினை முதன்மைப்படுத்திய வண்ணமயமான ஊர்வலத்தில் கிரிவெஹரவின் மேல் சென்று ஜனாதிபதி மற்றும் குழுவினர் பல பிக்குகளினால் தொடங்கப்பட்ட சமய சடங்குகளில் பங்கேற்று கிரிவெஹரவை விகாரையை வணங்கினர். மேலும் அங்கு கப்ருக் பூஜை மற்றும் கிலான்பச, மூலிகை படையல் (ஓசு பெண் பூஜை) (பிரசாதங்கள்) மற்றும் செத்பிரித் பராயாணங்கள் ஆகியவை கிரிவெஹரவில் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அந்த இடத்திற்கு விஜயம் செய்ததன் நினைவாக புனித வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

கதிர்காமம் மகா தேவாலய வளாகத்திற்குச் சென்ற அதிமேதகு ஜனாதிபதி அஷ்டபல போதியில் நடைபெற்ற போதி பூஜையில் கலந்து கொண்டதுடன், கதிர்காமம் மகா தேவாலயத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதே நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய துறவிகளின் கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்கும் வைபவத்தில் பங்கேற்று புலமைப்பரிசில்களை அன்றைய நிகழ்ச்சியில் வழங்கி வைத்தார்.