Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2021 21:00:16 Hours

நாடளாவிய ரீதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத்தினர் தயார் நிலையில்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் உருவாகி வரும் பாதகமான காலநிலை குறித்து விழிப்புடன் உள்ள இலங்கை இராணுவப் படையினர், குறித்த பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் தளபதிகளின் அறிவுறுத்தல்களின்படி, மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 612 வது பிரிகேடின் 12 வது இலங்கைப் பொறியியலாளர்களின் படையினர் மஹாகலுபஹன மலைத்தொடரில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை முன்கூட்டியே அகற்றும் நோக்கத்துடன் 42 பொது மக்களை உடனடியாக வெளியேற்றினர். அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, இன்று (9) அதிகாலை விஜேசுந்தராராமய விகாரை வளாகத்திற்குள் 11 குடும்பங்களைச் இடம் மாற்றம் செய்தனர்.

612 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 12 வது இலங்கைப் பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின்படி, தங்கள் வாகனங்களைப் பயன்படுத்தி அதிகாரிகள் உட்பட 25 க்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்கிய குழு சிவப்பு எச்சரிக்கை செய்யப்பட்ட சில நிமிடங்களில் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியது மேலும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், அவசரகால நிலைமைகள் முடிந்து மக்கள் வீடு திரும்பும் வரை, அந்த வீடுகளின் சொத்துக்கள் மற்றும் அவர்களது பொருட்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக மற்றொரு படைக் குழுவினரையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இன்று (9) அதிகாலை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 14 வது படைப்பிரிவின் 143 வது பிரிகேடின் முதலாவது இலங்கை தேசிய காவலர் படையினர் இராணுவ படகுகள் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தி கொடவெலவில், பொல்கஹவெல பகுதியில் இருந்து 50 குடும்பங்களைச் சேர்ந்த சில உறுப்பினர்களை மீட்கத் தொடங்கினர். பொல்கஹவெல பிரதேசம் வெள்ளத்தினால் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. அதன்படி, படையினர் பலரை பாதுகாப்பான இடங்களுக்கும், அருகிலுள்ள விகாரைகள் மற்றும் பிற பொது இடங்களுக்கும் பாதுகாப்பான முறையில் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் முதலாவது இலங்கை தேசிய காவலர் படையணியின் கட்டளை அதிகாரி, அந்த பகுதிகளில் இருந்து வெள்ள அபாயங்கள் குறையும் வரை பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக இராணுவ வீரர்களையும் அனுப்பினார்.

இதற்கிடையில், புத்தளம் நெடுங்குளம் பகுதியில் குளம் நிரம்பி வழியும் தருவாயில் உள்ள குளத்தினை உடைக்கும் அபாயத்தில் உள்ள பகுதிக்கு இராணுவத்தின் முதலாவது படையணி மற்றும் 58 வது படைப்பிரிவின் படையினர் மற்றும் 143 வது பிரிகேடின் படையினர்களும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று (9) காலை நிலவரப்படி, கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னர், அந்த படையினர் குளக்கட்டினை வலுப்படுத்தவும், நீர் நிலைகள் கசிவதால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கவும், குளத்தைச் சுற்றி பாதிக்கப்படக்கூடிய இடங்களில் மணல் மூட்டைகளை அமைத்தனர். 58 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின மேற்பார்வையில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 14 வது பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் முதலாம் படை மற்றும் 143 வது பிரிகேடின் கட்டளையின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் பின்னர், வெள்ள அச்சுறுத்தலுக்கு உள்ளான காலி, பத்தேகம, திஹாரிய, பதுரலிய, குக்குலேகங்க, தொடங்கொட, அலவ்வ, உடுபட்டவ, பன்னல, பிங்கிரிய, வீரபுகெதர, ரஸ்நாயக்கபுர, நாரம்மல, பதுவஸ்நுவர கிழக்கு மற்றும் பல பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட படையினர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்கு முன் தொம்பமட, ரம்புக்கனையில், இன்று (9) அதிகாலை, உயிருடன் புதைவூண்ட குடும்பத்தை பாதுகாப்பு படையினர் மீட்டுடெடுத்தனர்