Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th March 2023 20:28:36 Hours

நாடளாவிய ரீதியில் உள்ள சிப்பாய்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு உதவி

தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக புதன்கிழமை (மார்ச் 15) மருத்துவமனை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மருத்துவமனைகள் மற்றும் பிற பொது இடங்களில் அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.

அதன்படி, 61 வது காலாட் படைப்பிரிவின் 612 வது காலாட் பிரிகேடின் 1 வது இலங்கை முன்னோடி படையணியை சேர்ந்த சுமார் 35 இராணுவ வீரர்கள் களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஹொரண மாவட்ட வைத்தியசாலை மற்றும் பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் சேவைகளை நிர்வகிப்பதற்காக தமது உதவிகளை வழங்கினர்.

14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினர் மற்றும் இராணுவ பொறியியல் பாடசாலையும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, முல்லேரியா, எம்பிலிபிட்டிய ஆதார வைத்தியசாலைகளில் அத்தியாவசிய கடமைகளை ஈடுசெய்வதற்கு உதவிகளை வழங்கினர்.

இதற்கிடையில், 112 வது காலாட் பிரிகேட் படையினர் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அதிகாரிகள் மற்றும் நோயாளிகளுக்கு உதவியதுடன், 2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர் பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையில் சேவைகளை முன்னெடுக்க தமது உதவிகளை வழங்கினர்.

அதே நேரத்தில், 2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் அதிகாரிகளுக்கு உதவினர். அதேபோன்று, மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் சேவைகளைப் பேணுவதற்கு 18 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் உதவினார்கள்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.