Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th August 2021 08:30:10 Hours

நாடளாவியரீதியில் தனிமைப்படுத்தல் இன்று இரவு முதல்

தொற்று நோய் மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியிலான தனிமைப்படுத்தல் முடக்கம் இன்று இரவு 10 மணி தொடக்கம் (2021 ஆகஸ்ட் மாதம் ) 2021 ஆகஸ்ட் மாதம்30ம் திகதி திங்கட்கிமை அதிகாலை 4 மணி அமுலில் இருக்கும் என பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.

இருந்தப் போதும் அத்தியவசிய சேவைகள், மருந்துக் கடைகள், விவசாயம், ஆடைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறை என்பன வழமைப் இயங்குவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவம், கடற்படை. வான்படை என்பன சுகாதார துறையிடன் இணைந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.