Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2021 20:54:51 Hours

நல்லிணக்கத்தின் அடையாளமான கூரகல விகாரைக்கு இராணுவ தளபதி விஜயம்

பல வருடங்களாக ஆக்கிரமிக்கு உள்ளாகி பாழடைந்த நிலையில் காணப்பட்ட பலாங்கொடை கூரகல ரஜமஹா விகாரை அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பௌத்தர்கள் அல்லாதவர்களின் பங்களிப்புடன் நல்லிணக்கத்தின் அடையாளமாக புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினால் மேற்படி விகாரையை புனரமைப்புச் செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் மனித வள உதவிகளும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. குறித்த விகாரையின் புனர்நிர்மானத்திற்கு தேவையான ஆலோசணைகளை அதன் பொறுப்பாளாரும் கூரகல விகாரையின் நெல்லிகல சர்வதே பௌத்த மத்தியஸ்தானத்தின் தலைமை தேரர் வண. வத்துகும்புறே தம்மரத்தன தேரர் அவர்களால் வழங்கப்பட்டது.

ஜெனரல் சவேந்திர சில்வா சனிக்கிழமை (10) புனித விகாரையின் வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் இந்த விகாரை தொடர்பில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்த குகைகளில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி முதல் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் புத்த மடாலயமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குகையின் தாது கோபுரம் அமைந்துள்ள பகுதிக்குள் சென்ற போது தளபதி செங்கல் கட்டப்பட்ட தொல்பொருள் ரீதியாக முக்கியத்தும் பெற்ற தூபியின் மறுசீரமைப்பு பணிகளை நேரடியாக மேற்பார்வை செய்தார். இது பாரம்பரிய ஆகாச தூபி வகையைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அன்றைய பிரதம விருந்தினர் பின்னர் பலங்கொட தஞ்சந்தென்ன வித்யாலயாவின் 240 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள், புத்தக பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை என்பவற்றையும் வழங்கி வைத்தார். அங்கு முஸ்லீம், கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களின் மாணவர்கள் தங்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் புனித தூபி அமைந்திருக்கும் வளாகத்தில் கூடியிருந்தமை சிறப்பம்சமாகும்.

இங்கு மனதை தொடும் வகையிலான கலாசார அம்சங்கள் சில இடம்பெற்றதுடன், முஸ்லிம் மாணவியொருவர் பௌத்த பாடலொன்றை பாடினார். அத்தோடு வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் சில இடம்பெற்ற பின்னர் மத அனுட்டானங்களின் பின்னர் பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு ஆரம்பமானது.

அதே சந்தர்ப்பத்தில், ஜெனரல் ஷவேந்திர சில்வா மாணவர்களுக்கு, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் பாடசாலையின் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நன்கொடை தொகையை பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்தார். அத்தோடு சில வாரங்களுக்குள் தஞ்சந்தென்ன வித்யாலயத்தின் விளையாட்டு மைதானத்தை மீளமைக்க இராணுவத்தின் உதவி வழங்கப்படுமெனவும் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் வண வதுகும்புரே தம்மரத்தன தேரர், புத்த பிக்குகள், சிரேஸ்ட அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் கிராம பொது மக்களும் நிகழ்வின் பங்குபற்றினர். affiliate tracking url | Air Jordan