09th October 2021 20:50:59 Hours
தியத்தலாவை இலங்கை தொண்டர் படையணி பயிற்சி பாடசாலை வழங்கல் அதிகாரம்வாணை கொண்ட அதிகாரிகளுக்கான பாடநெறி – 24 வெள்ளிக்கிழமை (8) நிறைவடைந்தது.
இலங்கை இராணுவத்தில் உள்ள பயிற்சி நிறுவனங்களினால் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட பாடநெறியில் 42 நன்னடத்தை அதிகாரிகள் பங்குபற்றியிருந்ததோடு இராணுவ வழங்கல் கல்லூரியில் பாடநெறியின் முதலாவது கட்டம் செப்டம்பர் 9 ஆரம்பமானது.
மேற்படி பாடநெறி பயிற்சி பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் இராணுவ பயிற்சி கட்டளையின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவத்தின் “முன்னோக்கிய மூலோபாய திட்டமிடல் 2020 – 2025” இற்கு அமைவாக நடத்தப்பட்டது.
இலங்கை இராணுவ நிரந்தர படையில் தெரிவு செய்யப்பட்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகளை வழங்கல் அதிகாரிகளாக நியமிக்க தகுந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் மேற்படி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாடநெறியின் நிறைவு விழாவில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் எச்.ஏ கீர்த்திநாத பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்ததோடு, அவரது உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.