Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2021 23:03:01 Hours

நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பில் 64 வது படைப்பிரிவினர் ஒட்டுச்சுட்டானில் உலர் உணவு பொதிகள் விநியோகம்.

64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் 'சத்தியமூர்த்தி' சமூக தொண்டர் அமைப்பின் ஒத்துழைப்பில் சமீபத்தில் ஒட்டுச்சுட்டான் பகுதியில் உள்ள 100 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

642 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரசிக்க பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், 23 வது விஜயபாகு காலாட் படை மற்றும் 17 (தொ) கஜபா படை ஆகியவற்றின் படையினர் அந்தந்த கிராம சேவையாளர்களுடன் இணைந்து இந்த விநியோகத் திட்டத்தைத் முன்னெடுத்தனர்.

ஒட்டுசுட்டான், சம்மாங்குளம், தண்டுவான் மற்றும் பெரியித்திமடு பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 642 வது பிரிகேட் 23 வது வி.ஐ.ஆர் மற்றும் 3 (தொ) ஜி.ஆர் படைகளின் சிவில் விவகார அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.