Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2021 19:49:14 Hours

நன்கொடையாளர்களின் உதவியுடன் 141 வது பிரிகேடினரால் நிர்மாணிக்கப்பட்ட மேலுமொரு வறிய குடும்பத்திற்கு வீடு

அத்தனகல்லே பிரதேசத்தில் வசிக்கும் ஆதரவற்ற தாயாரான திருமதி பிரதீபா நிரோஷினி,க்கு 'செவனக் வெமு அறக்கட்டளை' வழங்கிய நிதி அனுசரணையுடன் 6 வது இலங்கை பீரங்கிப் படையின் மற்றும் முதலாவது பொறியாளர் சேவைப் படையணின் கீழ் இயங்கும் 12 வது பொறியாளர் சேவைப் குழு இணைந்து நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு வியாழக்கிழமை 21 ம் திகதி பயனாளிக்கு வழங்கப்பட்டது.

141 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிக்காட்டலின் கீழ் 14 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 141 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே இத்திட்டம் படையினரால் நிறைவு செய்யப்பட்டது.

வீட்டை நிர்மாணிப்பதற்கான மூலப்பொருட்களுக்கான நிதி உதவியினை ‘செவனக் வெமு’ அறக்கட்டளையினால் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், வீடு திறப்பு விழாவின் போது வண. மெதௌயங்கொட விமலகீர்த்தி தேரரினால் ஆரம்ப சமய நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.

இந்நிகழ்வில் 141 வது பிரிகேட் தளபதி 6வது இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் 12 வது பொறியியல் சேவை குழுவின் கட்டளை அதிகாரகள், செவனக் வெமு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பயனாளி குடும்ப உறவினர்கள் கலந்துக் கொண்டனர்.